மறைமலை அடிகள் விழாவில் திருமாவளவன் உரை

திங்கள், 9 நவம்பர், 2009

தமிழ் மாதப் பெயர்களை நாம் தமிழில் எழுதுவோம் வருக.

தமிழ் மாதப் பெயர்களை நாம் தமிழில் எழுதுவோம் வருக.

வடமொழிப் பெயர் - தமிழ்ப்பெயர்

  • தை - சுறவம் ( 30 ) ( 14 jan - feb 12 )
  • மாசி - கும்பம் (30 ) ( 13 feb - 14 mar )
  • பங்குனி - மீனம் ( 30 ) ( 15 marc - 13 Apr )
  • சித்திரை - மேழம் (31 ) (14 Apr - 14 May )
  • வைகாசி - விடை (31) (15 May - 14 Jun )
  • ஆனி - ஆடவை (32 ) ( 15 Jun - 16 Jul )
  • ஆடி - கடகம் ( 31 ) ( 17 Jul - 16 Aug )
  • ஆவணி - மடங்கல் (31 ) (17 Aug - 16 Sep )
  • புரட்டாசி - கன்னி (31) ( 17 Sep - 17 oct )
  • ஐப்பசி - துலை ( 30 ) (18 oct - 16 Nov )
  • கார்த்திகை - நளி ( 29 ) ( 17 Nov - 15 Dec )
  • மார்கழி - சிலை ( 29 ) ( 16 Dec - 13 jan )
நாம் ஒவ்வொரு திங்களும் பயன்படுத்தும் திங்கள் பெயர்கள் தமிழாக இல்லை என்பதைத் தாங்கள் அறிவீர்களா? தூயதமிழ் முறைப்படி அவற்றை மேற்கண்டவாறுதான் எழுத வேண்டும். வடமொழியை அகற்றி நம் அன்னைத் தமிழை வாழ்விக்கும் எண்ணமுடைய தமிழர்கள் அனைவரும் இத்திங்கள் பெயர்களைத் தூயதமிழிலேயே எழுதி வருங்கின்றனர். தமிழைச் சீரழித்து வடமொழியைக் கலந்து எழுதும் மனப்போக்கு அடிமை உணர்வு கொண்ட தமிழரிடத்தும் பகை உள்ளம் கொண்ட தமிழர் அல்லாரிடத்தும் மிக்கிருந்த கரணியத்தால் தமிழில் அனைத்துத் துறைகளிலும் ஒருகாலத்தில் வடசொற்கள் வரைதுறையின்றி புகுத்தப் பட்டன. அவற்றின் விளைவுகளில் ஒன்றுதான் மாதப் பெயர்களும் வடமொழியாகிய நிலை. நாம் இனி தமிழை மீட்போம். தமிழராய் வாழ்வோம் வருக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக