மறைமலை அடிகள் விழாவில் திருமாவளவன் உரை

புதன், 4 நவம்பர், 2009

தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களை அடையாளம் காண்பது எப்படி?

வினா : தமிழில் கலந்துள்ள சில பிறமொழிச் சொற்களைப் பிரித்தறிய முடிவதில்லை. இதனைப் பகுத்தறிந்து கொள்வது எப்படி?

விளக்கம் : மிக நீண்ட காலமாகத் தமிழில் கலந்திருக்கின்ற சொற்களையே பிரித்தறிய முடியாத சிக்கல் புதியவர்களுக்கு ஏற்படலாம். அயல் சொற்கள் எண்ணெயும் நீரும் போல தனித்தனியே கிடப்பன. அவற்றைப் பிற மொழிச் சொற்கள் என எளிதில் அறிந்து கொள்ளலாம்.

ஆனால் தமிழ் போல மயங்கப் படும் வடமொழிச் சொற்களை இவ்வாறு பிரித்தறிவது சற்றுக் கடினந்தான். இதனையும் நிறைந்த நூல் பயிற்சியின் வாயிலாகவும் ஈடுபாட்டின் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.

தனித்தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் முதலானோர் எழுதிய நூல்கள் பலவற்றைப் படிக்கின்ற பழக்கம் வேண்டும். பிறமொழிச் சொற்கள் தமிழ் ஒலிப்பு முறையில் வேறுபட்டிருக்கும். வடமொழி கிரந்த வடிவங்களைப் பெற்றிருக்கும். சிலவன தமிழிலிருந்து பிரிந்து திரிபுற்றனவாக இருக்கும். அயற்சொல் விளக்க தமிழ் அகர முதலிகளைக் காணின் நலம் பயக்கும் . தமிழூர் ப. அருளி, நீலாம்பிகை அம்மையார் முதலானோரின் அகர முதலிகளைக் காண்க.

எடுத்துக் காட்டாகச் சில :

அயற்சொல் தமிழ்ச்சொல்

  • லாபம் - ஈட்டம்
  • புஷ்பம் - பூ
  • பிரதேசம் - பைதிரம்
  • ஜனாதிபதி - அதிபர்
  • ராஜா - அரசன்
  • ஷர்பம்- பாம்பு
  • பகிஷ்கரிப்பு - புறக்கணிப்பு
  • ஸம்ஸாரம் - மனைவி
  • ஜலம்- நீர்


இரா.திருமாவளவன்


தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக