மறைமலை அடிகள் விழாவில் திருமாவளவன் உரை

செவ்வாய், 3 நவம்பர், 2009

என்னே! தமிழ் இளமை என்னே!

-மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்-

என்னே! தமிழ் இளமை என்னே! - அதற்
கீடான தொன்றில்லையே - இதை
மறுப்பாருண்டோ என்றும் மறைப்பாருண்டோ - எதிர்
மாற்றாரும் மறப்பாருண்டோ (என்னே)

முதன்மாந்த ரொடுதோன்றி
முதிதாயினும் - மக
மொழியாவும் பலவாகக்
கிளை போயினும்
இதுபோதும் முன்போல் மெல்
லியல்தாங்கியே
இளஞ்சேயர் பிணியார்வாய்
எளிதாகவே (என்னே )

இலத்தீனம் வடநாவல்
மறை யாரியம்
ஏராளம் துணைகொண்டும்
இழவானவே
இனத்தாரும் வேற்றாரும்
நெடுங்காலமாய்
எதிர்த்தேதீங் கிழைத்தாலும்
இருக்கும் தமிழே! (என்னே )

'கண்ணா கருமை நிறக் கண்ணா ' என்ற மெட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக