தனித்தமிழியம் வலைப்பூ உலகத்தில் ஒரு புதிய வரவு
தனித்தமிழியம் என்றாலும் தமிழியம் என்றாலும் ஒன்றே! இருப்பினும் செந்தமிழ் வண்டமிழ் தண்டமிழ் ஒண்டமிழ் என்று கூறுமாறு போல தமிழியத்தின் சிறப்பே தனித்தமிழியமாம்.
சிலருக்குத் தனித்தமிழ் என்றாலே வேம்பாய்க் கசக்கும். பிறமொழி சொற்கலந்து எழுதுதல் அவர்களுக்கு இனிக்கும். தமிழருள்ளும் இத்தகையார் சிலர் உளர். இத்தகையார் செய்த தகிடு தத்தங்கள் பல. தமிழர் அல்லாராலும், தமிழுரு போர்த்திய புல்லுருவியராலும் தமிழ்ப் பகைவராலும் தமிழுக்கும் தமிழர்க்கும் ஏற்பட்ட கேடுகள் பற்பல. அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி தனித்தமிழியம் வென்று வருகின்றது. மறைமலை அடிகளார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றோர் ஆற்றிய அரிய செயல்களால் உலகம் தழுவிய பேரியக்கமாய் தனித்தமிழியம் விரிந்துள்ளது. அதன் முந்தைய வரலாற்றையும் இன்றைய விரிவையும் இவ்வலைத்தளத்தில் தொடர்ந்து காண்போம் வருக.
இரா.திருமாவளவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக